MARC காட்சி

Back
திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம்
245 : _ _ |a திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம் -
246 : _ _ |a புனித லூர்து அன்னை கிறித்துவ ஆலயம்
520 : _ _ |a திருச்சிராப்பள்ளி நகரின் மத்தியில், மெயின்கார்டு கேட் அருகே புனித லூர்து அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயமும் இதன் வரலாறும் புனித ஜோசப் கல்லூரி வரலாறும் வளாகங்களும் இணைநதே உள்ளன. இந்த ஆலயத்தின் எதிரே திருச்சி மலைக் கோட்டையும் தெப்பகுளமும் அமைந்துள்ளன. தெப்பகுளத்தின் கிழக்குக் கரையில், கிளைவ்ஸ் கட்டடம் இருக்கும் இடத்தில் இருந்து இந்த ஆலயத்தினையும் தெப்பக்குள மண்டபத்தையும் ஒரு சேர மத நல்லிணக்கத்தோடு காணலாம். திருச்சியில் கோட்டைப் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் கட்டத் தொடங்கியபோது இயேசு சபையில் பிரெஞ்ச்சு நாட்டைச் சேர்ந்த இறைப் பணியாளர்களே அதிகம் இருந்தனர். அவர்கள் தங்கள் நாட்டில் (பிரான்ஸ்) காட்சி தந்த லூர்து அன்னையின் பெயரையே இந்த தேவாலயத்திற்கும் சூட்டினார்கள். ஆலயத்தின் நூற்றாண்டு விழா (1896 –1998) நடந்தது. அப்போது தேவாலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இப்போதும் திருச்சிக்கு கம்பீரம் சேர்க்கும் விதமாக புனித லூர்து அன்னை ஆலயம் இருந்து வருகிறது.
653 : _ _ |a கிறித்துவம், கிறிஸ்துவம், தேவாலயம், சர்ச், தமிழ்நாடு, கிறித்துவ திருத்தலம், புனித லூர்து அன்னை ஆலயம், லூர்து மாதா தேவாலயம், திருச்சி, திருச்சிராப்பள்ளி
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.1896
909 : _ _ |a 8
910 : _ _ |a 114 ஆண்டுகள் பழமையானது.
914 : _ _ |a 10.762409955213
915 : _ _ |a 78.836442854371
918 : _ _ |a புனித லூர்து அன்னை
922 : _ _ |a கிறிஸ்துமஸ் மரம்
924 : _ _ |a வேதாகமம்
925 : _ _ |a வார நாட்கள் : காலை: 5.30 a.m & 6.30 a.m மாலை: 6.30 p.m ஞாயிறு : காலை: 5.15 a.m, 6.15 a.m & 7.30 a.m மாலை: 6.30 p.m
926 : _ _ |a கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு
928 : _ _ |a மேற்கூரையிலும் பக்கவாட்டிலும் வண்ண ஓவியங்கள். பெரும்பாலானவை கண்ணாடி ஓவியங்களாக இருக்கின்றன.
929 : _ _ |a லூர்து அன்னையின் சிற்பம் ஆலயத்தின் வழிபாட்டிடத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
930 : _ _ |a தற்பொழுது திருச்சியில் இருக்கும் புனித ஜோசப் கல்லூரியானது ஆரம்பத்தில் நாகப்பட்டினத்தில் இருந்தது. பின்னர் அங்கிருந்து 1883 ஆம் ஆண்டு திருச்சிக்கு மாற்றப் பட்டது. ஆரம்பத்தில் கல்லூரியானது கிளைவ்ஸ் கட்டடத்தில் இயங்கியது. அப்போது திருச்சியில் கோட்டைப் பகுதியில் இருந்த பெல்லார்மின் ஹால்தான் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வழிபாட்டு இடமாக இருந்திருக்கிறது.. அருள் தந்தை ஜோசப் பெய் என்பவர் 1884 ஆம் ஆண்டு முதல் 1893 வரை கல்லூரி முதல்வராக இருந்தார். அவர் இந்த ஆலயம் எழுப்புவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். அவர் காலத்தில் தேவாலயம் கட்டுவதற்கு திட்டம் போடப்பட்டு பணி தொடங்கப்பட்டது. அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த தனம் சவரிமுத்து மேஸ்திரியார் என்பவரிடம் இந்த பணியை ஒப்படைத்தார். அப்போது திருச்சி ஆயராக இருந்த ஜான் மேரி பார்த் என்பவர் 1890 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி , தேவாலயத்தின் அஸ்திவாரத்திற்கான முதல் கல்லை ஆசீர்வாதம் செய்து எடுத்து வைத்து தேவாலயம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். 1893 முதல் 1903 வரை ஜோசப் கல்லூரியின் முதல்வராக இருந்த அருள் திரு லியோ பார்பியர் அவர்கள் தேவாலயம் கட்டும் பணியில் முழுமையாக ஈடுபட்டார். 1890 இல் தொடங்கப்பட்ட தேவாலயப் பணியானது 1898- ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பிரதான கோபுர வேலை மட்டும் நான்கு ஆண்டுகள் தடைபட்டு, பின்னர் 1903 – ஜனவரி தொடங்கி 1910- டிசம்பரில் முடிந்தது.
932 : _ _ |a தேவாலயத்தின் வாயில் வியக்கத்தக்கதாய் காணப்படுகிறது. தேவாலயம் கோதிக் கட்டடக்கலை (Gothic architecture) அமைப்பில் உருவானது. இந்த கோதிக் கட்டடக் கலையினைப் பற்றிய பயிற்சிகள் , ஆலயத்தை கட்டும் பணியை மேற்கொண்ட தனம் சவரிமுத்து மேஸ்திரியாருக்கும் மற்றவர்களுக்கும் சொல்லித் தரப்பட்டன. இதன் மேற்பார்வையை அருள்தந்தை பெர்னார்டுசெல் பார்த்துக் கொண்டார். தேவாலயம் கட்டுவதற்கு தேவையான கற்கள் கல்லூரியின் உள்ளே இருந்த கல் குவாரியில் இருந்தே வெட்டி எடுக்கப்பட்டன. சுடு சிற்பங்கள் இங்கிருந்த களி மண்ணாலேயே செய்யப்பட்டன. கட்டட அமைப்பில் பிரான்ஸ்சில் உள்ள லூர்து நகர் தேவாலயம் போன்றே இந்த திருச்சி புனித லூர்து அன்னை தேவாலயமும் கட்டப்பட்டது . கோயிலின் உள்ளே நன்கு விசாலமான அமைப்பு. அண்ணாந்து பார்க்க வைக்கும் மேற்கூரையிலும் பக்கவாட்டிலும் வண்ண ஓவியங்கள். பெரும்பாலானவை கண்ணாடி ஓவியங்களாக இருக்கின்றன.
933 : _ _ |a திருச்சி மறை மாவட்ட திருச்சபை
934 : _ _ |a திருச்சி மலைக் கோட்டை, தெப்பகுளம், கிளைவ்ஸ் கட்டடம்
935 : _ _ |a திருச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
936 : _ _ |a வார நாட்கள் : காலை: 5.30 a.m மற்றும் 6.30 a.m மாலை: 6.30 p.m ஞாயிறு : காலை: 5.15 a.m, 6.15 a.m மற்றும் 7.30 a.m மாலை: 6.30 p.m
937 : _ _ |a திருச்சி
938 : _ _ |a திருச்சி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a திருச்சி நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000357
barcode : TVA_TEM_000357
book category : கிறித்துவம்
cover images TVA_TEM_000357/TVA_TEM_000357_திருச்சி_புனித_லூர்து-அன்னை-ஆலயம்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000357/TVA_TEM_000357_திருச்சி_புனித_லூர்து-அன்னை-ஆலயம்-0001.jpg